மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விநாயகரை வழிபடவும்

என் மகனுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. நிலையானவேலையும் தற்போது இல்லை. அவருக்கு எப்பொழுது நல்ல சம்பளத்துடன்  நிலையான  வேலை கிடைக்கும்?

News image
Updated On :31 ஜூலை 2020, 12:30 am

DIN


என் மகனுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. நிலையானவேலையும் தற்போது இல்லை. அவருக்கு எப்பொழுது நல்ல சம்பளத்துடன்  நிலையான  வேலை கிடைக்கும்? குழந்தை பாக்கியம் எப்பொழுது உண்டாகும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? 

வாசகர், குரோம்பேட்டை. 

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னம், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்) ஏழாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சனி, சுக்கிர பகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதியான சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சிபெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். லக்னத்தில் புத ஆதித்யர்கள் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் படிப்புக்கேற்ற நல்ல வருமானத்துடன் தகுதியான வேலை இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.