திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

துர்க்கையையும், முருகப் பெருமானையும் வழிபடவும்

என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? அடிக்கடி தடங்கல் ஏற்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை அவ்வப்போது சரியில்லாமல் போகிறது. சொந்த வீடு கட்டும் யோகம் உண்டா? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

Updated On :5 ஜூன் 2020, 3:23 pm

என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? அடிக்கடி தடங்கல் ஏற்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை அவ்வப்போது சரியில்லாமல் போகிறது. சொந்த வீடு கட்டும் யோகம் உண்டா? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

-வாசகர், கோவை.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்று புத பகவானுடன் (புத ஆதித்ய யோகம்) இணைந்திருக்கிறார்.

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து, தைரிய ஸ்தானத்தையும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் 

பகவானையும் (குருமங்கள யோகம்) பார்வை செய்கிறார். தைரிய தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு.

ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டிலேயே ஆட்சி, வர்கோத்தமமும் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அஷ்ட லட்சுமி யோகமும், அஷ்ட மகா நாக யோகமும் கொடுக்கும் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்.

தற்சமயம் குரு மகா தசையில் புத பகவானின் புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் படித்த நல்ல வேலையில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். ஆறாம் வீட்டில் சனி பகவான் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. உங்கள் குடும்ப மேன்மைக்காக பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.