திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெளிநாட்டு வாசம்

எனது மகளுக்கு 30 வயதாகிறது. மென் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இன்னும் சரியான வரன் அமையவில்லை.

Updated On :5 ஜூன் 2020, 2:11 pm


எனது மகளுக்கு 30 வயதாகிறது. மென் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இன்னும் சரியான வரன் அமையவில்லை.  திருமணம் எப்போது நடைபெறும்? பணியிட மாற்றம் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? 

- வாசகர், திருவாரூர்

உங்கள் பெண்ணுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவானும் லக்னத்தில் இணைந்திருக்கிறார். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக லக்னத்தையும் அங்கமர்ந்திருக்கும் சனி, சந்திரபகவான்களையும் (கஜகேசரி யோகம்) ஒன்பதாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் ராகுபகவானையும் பார்வை செய்கிறார். 

பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியானசெவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்து, புத, சுக்கிர, சூரிய பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் புதபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையில் உள்ள வரன் அவர் சார்ந்துள்ள துறையிலேயே அமைந்து திருமணம் கைகூடும். எதிர்பார்க்கும் இடமாற்றமும் கிடைக்கும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.