நான் பிடெக் படிப்பு முடித்திருக்கிறேன். அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்? வரன் எந்தத் திசையில் எப்படிப்பட்டவராக அமையும்? அவர் அரசுத்துறை அல்லது தனியார் துறையில் பணிபுரிபவராக இருப்பாரா?
-வாசகி, சென்னை-106.
உங்களுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் தைரிய தொழில் ஸ்தானாதிபதியான நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானுடன் இணைந்து இருக்கிறார். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாபஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும், கேது பகவான் லாப ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். குரு பகவானின் ஐந்தாம் பார்வை, சேவை செய்யும் வீடான ஆறாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ஆட்சி பெற்றுள்ள சனி பகவானின் மீதும், ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் (கஜகேசரியோகம்), ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அரசு கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி பகவான் பலமாக இருப்பதால் அரசு (அ) அரசு சார்ந்த துறைகளில் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் வேலை அமையும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். வரன் தனியார் துறையிலிருந்து அமைவார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

