6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஷ்டலட்சுமி யோகம்

என் மகன் கணினி பொறியியல் படிப்பு படித்துள்ளார். தகுந்த வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது செய்யலாம்? புத்திர பாக்கியம், ஆயுள் ஆரோக்கியம் பற்றியும் கூறவும்..! 

News image
Updated On :2 அக்டோபர் 2020, 2:35 pm

DIN


என் மகன் கணினி பொறியியல் படிப்பு படித்துள்ளார். தகுந்த வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது செய்யலாம்? புத்திர பாக்கியம், ஆயுள் ஆரோக்கியம் பற்றியும் கூறவும்..! 

-வாசகர், திருநெல்வேலி. 

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம் என்று வருகிறது; சுவாதி நட்சத்திரம் அல்ல. இதை "நட்சத்திர சந்தி' என்பார்கள். லக்னாதிபதி புத பகவான், தைரியாதிபதி சூரிய பகவான், அஷ்டம பாக்கியாதிபதி சனி பகவான் ஆகியோர் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. பூர்வ புண்ணிய அயன ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்து பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். 

இதனால் தகுந்த வேலை கிடைத்து, உத்தியோகத்தில் நல்ல நிலையை எட்டி விடுவார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானமான தன் ஆட்சி வீடான மீன ராசியையும், அங்கமர்ந்திருக்கும் உச்சம் பெற்றுள்ள சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். ஆரோக்ய ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். ஆரோக்ய ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார். இதனால் ஆரோக்யத்திலும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. 

அஷ்டமாதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வலுத்திருப்பதாலும், ஆயுள் ஸ்தானத்தை குரு பகவான் பார்வை செய்வதாலும் தீர்க்காயுள் உண்டு. பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் புத்திர பாக்கியத்திற்கு குறைவு வராது. தற்சமயம் சனி மஹா தசையில் ராகு பகவானின் புக்தி நடைபெறுவதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தகுதியான நல்ல வேலை அமைந்து விடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.