ஆசிரியர் பணி அமையும்
எனக்கு 34 வயதாகிறது. இயற்பியலில் எம் ஃபில், பிஎட் படித்துள்ளேன். ஆசிரியர் வேலை அல்லது அரசு உயர் பதவிகளுக்கு முயற்சி செய்யலாமா? என் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் கூறவும்.


எனக்கு 34 வயதாகிறது. இயற்பியலில் எம் ஃபில், பிஎட் படித்துள்ளேன். ஆசிரியர் வேலை அல்லது அரசு உயர் பதவிகளுக்கு முயற்சி செய்யலாமா? என் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் கூறவும்.
-வாசகி, மதுரை.
உங்களுக்கு கன்னி லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான புத பகவான் லாபஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக களத்திராதிபதியான குரு பகவானின் ஐந்தாம் பார்வையைப் பெறுகிறார். குரு பகவானின் ஏழாம் பார்வை புத பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை லக்னத்தின் மீதும் படிகிறது. சனிபகவான் இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். சூரிய, செவ்வாய் பகவான்கள் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் புத பகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளதால் அரசு வேலை குறிப்பாக, ஆசிரியர் வேலை அமையும். உங்கள் மூத்த மகளுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் லக்னாதிபதியான சுக்கிர பகவானின் தசை நடக்கிறது. உங்கள் இரண்டாம் மகளுக்கு கன்னி லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். தற்சமயம் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்றுள்ள லக்னாதிபதியின் தசை நடப்பதும் சிறப்பாகும். இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...