6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சம தோஷமுள்ள வரன் 

முதுகலைப் பட்டம் பெற்ற என் மகளுக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? ஆசிரியர் பணி, அரசு பணி, வங்கிப் பணிகளில் எது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடைபெறும்? ஜாதகத்தில் தோஷம் உள்ளதா?

News image
Updated On :2 அக்டோபர் 2020, 2:33 pm

DIN


முதுகலைப் பட்டம் பெற்ற என் மகளுக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? ஆசிரியர் பணி, அரசு பணி, வங்கிப் பணிகளில் எது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடைபெறும்? ஜாதகத்தில் தோஷம் உள்ளதா?

- வாசகர்... 

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி ஏழாம் வீட்டில் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். இதனால் மகாவிஷ்ணு, மகாலட்சுமி யோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. லக்னாதிபதியே எட்டாம் வீடான மாங்கல்ய ஸ்தானத்திற்கும் அதிபதியாக ஆவதால் அவர் சுப பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். நான்கு, ஐந்து ஆகிய இரண்டு வீடுகளுக்கும் அதிபதியான ராஜயோக காரகரான சனி பகவான், ஆறாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். குருபகவான் நான்காம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று ஐந்தாம் பார்வையாக எட்டாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார். இரண்டு, ஏழு வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் பதினொன்றாம் வீட்டில் பத்தாம் வீட்டுக்கதிபதியான சந்திர பகவானுடன் இணைந்து சந்திர மங்கள யோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் சந்திர பகவானின் தசையும் நடக்கத் தொடங்கியிருப்பதும் சிறப்பாகும். அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வங்கி, காப்பீடு துறைகளில் வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த வரன் தெற்கு திசையிலிருந்து, ஏழாம் வீட்டிற்கு சம தோஷமுள்ள வரனாக அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.