சிறப்பான வேலை உண்டு!
எனக்கு திடீரென்று வேலை போய்விட்டது. மறுபடியும் எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்?


எனக்கு திடீரென்று வேலை போய்விட்டது. மறுபடியும் எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்?
-வாசகர்....
உங்களுக்கு மேஷ லக்னம், சிம்மராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, ஆறாமதிபதி ஆகியோர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று ஐந்தாம் பார்வையாக லக்னத்தையும், ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜயோகம்), செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்), சந்திர பகவானையும் (குருச் சந்திர யோகம்), புத பகவானையும் பார்வை செய்கிறார். ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் ராகு பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு தகுதியான சிறப்பான வேலை அமையும். பகுதிநேரமாக உபரி வருமானம் வரக்கூடிய தொழிலும் அமையும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...