எனக்கு திருமணம் 1975 இல் நடந்தது குழந்தைகள் ஆண் இரண்டு. பெண் மூன்று என மொத்தம் ஐந்து குழந்தைகள். சுமார் 25 வருடங்கள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து வந்தேன். கடந்த 15 ஆண்டுகளாக மனைவியிடமும், குழந்தைகளிடமும் வெறுக்கப்பட்டவனாக இருக்கிறேன். இருந்தும் குடும்பத்தை விட்டு விலக வில்லை. இதே நிலைதான் நீடிக்குமா. கொஞ்ச காலமாவது சேர்ந்து சந்தோஷமாக வாழ இறைவன் அனுமதிப்பாரா.. எந்த தெய்வத்தை வழிபட்டால் என் வாழ்க்கை சீரடையும்.
- பெயர்,
ஊர் வெளியிட விரும்பாத வாசகர்
உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாகம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதி சந்திர பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்னம், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
சுகஸ்தானமான நான்காம் வீடு நிலம், வியாபாரம், விவசாயம், ஆடை ஆபரணங்கள், சுக போஜனம், நீர்நிலைகள், புகழ், கெளரவம், அந்தஸ்து தாயாரின் நிலை, வண்டி வாகனம் குறிப்பாக குடும்பத்தில் நிம்மதி, சுகம் போன்றவற்றைக் குறிக்கும்.
சுகஸ்தானத்தில் லக்னாதிபதி லக்ன சுபராக ஆட்சி பெற்றுள்ள சூரிய பகவானும் இணைந்திருப்பதால் சுகஸ்தானம் பாதிக்கப்படவில்லை என்று கூற வேண்டும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் அடைகிறார்.
தர்மகர்மாதி பதியான சனி பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார்.
இதை இரண்டு திரிகோணாதிபதிகள் இணைவு என்று கூறவேண்டும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
கிரகங்கள் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருப்பது மேன்மை என்றும், அதனால் அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் உயர்வான பலம் பெறும் என்றும் பலமுறை எழுதியிருக்கிறோம்.
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
சந்திர பகவானுடன் இணைந்திருப்பதால் குரு சந்திர யோகம் உண்டாகிறது. குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது.
லக்னத்தில் ராகு பகவான் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியையும், களத்திர ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
உங்களுக்கு தற்சமயம் சூரிய மகா தசையில் சனி புக்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குப் பிறகு, உங்கள் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரத் தொடங்கும். மன அமைதியும் உண்டாகும். மற்றபடி பெரியதாக கவலைப்படும்படி எதுவும் இல்லை. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சி தலைமை அறிவுறுத்தல்!!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! வீடு, வாகனக் கடன் வட்டி குறையுமா?
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

