பால சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்காது..!
என் பேரனின் படிப்பு, ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது...? சுக்கிர தசையில் வளர்ச்சி இருக்காதா...? பால சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்குமா...? செவ்வாய் தோஷம் உள்ளதா...? என்ன படிப்பு ஏற்றது...? தந்தையின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்...?
-வாசகி, சென்னை.
உங்கள் பேரனுக்கு மீன லக்கனம், சிம்மராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் வேலையைக் குறிக்கும் வீடான ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான மேஷ ராசியை அடைகிறார்.
குரு பகவான்ஐந்தாம் பார்வையாக தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியையும் (தொழில் ஸ்தானம்) பார்வை செய்கிறார். எந்த கிரகமும் தன் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோண வீட்டையும் பார்வை செய்வது அந்த வீட்டிற்கு பலமூட்டும் அமைப்பு.
குருபகவானின் ஏழாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்), வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருக்கும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானைப் பார்வை செய்வதால் தந்தைக்கு சிறப்புகள் கூடும்.
குரு பகவான் தன் ஒன்பதாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கதிபதி ஆன சந்திர பகவான் ஆறாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் அடைகிறார்.
பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் முழுமையான பலத்தைப் பெறுகிறார். அவர் குரு (குரு சந்திர யோகம்) பகவானுடன் இணைந்திருப்பதும், செவ்வாய் (சந்திர மங்கள யோகம்) பகவானைப் பார்வை செய்வதும் சிறப்பாகும்.
இது மூன்று திரிகோணாதிபதிகளின் இணைவு என்கிற ரீதியில் மேன்மையாகும். திரிகோண ஸ்தானங்களை }லட்சுமி ஸ்தானங்கள்} என்று ஜோதிடம் சிலாகித்துக் கூறுகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியில் நீச்சம் அடைகிறார்.
சுகம், கல்வி, அன்னை ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், சுபாவ சுப கிரகமாகி ஆறாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார்.
ஆறாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும், அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் நான்காம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான கும்ப ராசியை அடைகிறார்.
போக காரகரான ராகு பகவான் மூன்றாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். ஞான காரகரான கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
கல்வி காரகரான புத பகவான் இரண்டு திரிகோணாதிபதிகளுடன் இணைந்து மற்றொரு திரிகோணாதிபதியால் பார்க்கப்படுவதால் உயரிய படிப்பு உண்டு. நிதி, ஆடிட்டர், மேலாண்மைப் படிப்பு ஏற்றது. கணினி துறையும் ஏற்றதே. அதோடு கல்வி ஸ்தானத்தில் பலம் பெற்ற சனி பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு.
செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் வர்கோத்தமத்தில் குரு பகவானின் சம சப்தம பார்வையைப் பெற்றிருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை. பொதுவாகவே சனி, சுக்கிர, ராகு, கேது பகவான்கள் பிற்கூறிலேயே பலன் தருவார்கள்.
செவ்வாய் பகவான் மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுவதால் }கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்} என்கிற ஜோதிட விதியின் அடிப்படையில் அவரால் நன்மையே உண்டாகும்.
தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி 05.04.2023 வரை நடக்கும். இந்த புக்தியிலும் தொடரும் புத பகவான் புக்தியிலும் படிப்பில் ஏற்றமாகவே இருக்கும். இதனால் }பால சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்} என்ற பழமொழி ஒத்து வராது. சூரிய பகவானின் தசையில் பிற்பகுதியிலிருந்து மேன்மை உண்டாகும். எதிர்காலம் வளமாகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏமாற்றும் பயிற்சியாளர்: தோனி இல்லாமல் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத பிளெமிங்!

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்

உங்க ஊர் மாப்பிள்ளை நான்! மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு! | DMK
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

