புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையில் வேலை அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? 

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையில் வேலை அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? 

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 11:36 am

DIN

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையில் வேலை அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? 

- வாசகர், கோவை. 

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னாதிபதி, நான்காமதிபதி (கல்வி, வீடு, வாகனம், அன்னை ஆகியவற்றைப் பிரதிபலிப்பவர்) குரு பகவான் நான்காம் வீட்டில் சுய சாரத்தில் ஆட்சி பெற்று, நவாம்சத்தில் தன் உச்ச வீடான கடக ராசியை அடைகிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ஆட்சி பெற்ற சந்திர (குரு சந்திர யோகம்) பகவானையும், செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும், புத, சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். 

குரு பகவானின் ஏழாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். 

பாக்கியாதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். 

தொழில் ஸ்தானாதிபதியான புத பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் தனியார் துறையில் சிறப்பான வேலை கிடைக்கும். தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதிக்குரிய வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நிரந்தரமான நல்ல வருமானம் வரும் வேலைக்கு மாறுவார். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.