மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடக ராசிக்காரர்களே உத்தியோக மாற்றத்துக்குத் தயாரா? இன்றைய ராசி பலன் உங்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான்!

எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் சற்று யோசித்தே பேசவும். வாயைக் கொடுத்து

News image
Updated On :17 டிசம்பர் 2017, 6:30 am


மேஷம்

எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் சற்று யோசித்தே பேசவும். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். வெகு நாள் தள்ளிப் போட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். 

ரிஷபம்

தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். பயணத்தின் போது அதிக கவனத்துடன் இருங்கள்.

மிதுனம்

மனத்தில் தெளிவு பிறக்கும். திரும்பி வராது என்று நினைத்த கடன் திரும்பக் கிடைக்கும். பண வரவு இருக்கும்.

Story image

கடகம்

முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பலமுறை சிந்தித்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

சிம்மம்

நண்பர்கள் உதவியுடன் நீண்ட நாள் நிலுவையில் இருந்த பிரச்னைகள் தீரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்று பெறும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சிலருக்கு வேலை மாற்றம் நிகழும்.

கன்னி

வெகு நாள் பகை தீரும். சந்தோஷமும் உற்சாகமும் பெறுகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரும். முயற்சி திருவினையாக்கும்.

துலாம்

பகைவர்கள் விலகிச் செல்வார்கள். வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புதியன புகுதல் பழைய கழிதல் நிகழும். கடன் சுமை இருந்தால் நீங்கும். உறவினர்களாலும் உடன்பிறப்புக்களாலும் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்

உங்களைச் சுற்றி இருப்பவர்களால் பாராட்டப்படுவீர்கள். நினைத்தபடி காரியங்கள் நடக்கும். பண வரத்து அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேறும்.

தனுசு

வேலை செய்பவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.. உடல் நலத்தில் அக்கறை தேவை. பயணங்கள் ரத்தாகலாம். நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.

மகரம்

பண வரத்து குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். மனத்தில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றி மறையும். இறை சிந்தனையில் மனத்தை திசைதிருப்பிக் கொள்ளுங்கள். சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

கும்பம்

எடிர்பாராத மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். கோவிலுக்கு சென்று வாருங்கள். நீண்ட நாள் சந்திக்காத நண்பரை சந்திக்க நேரிடும். சுற்றியிருபபர்கள் அனுகூலங்களை அள்ளித் தருவார்கள். கனவுகள் கைகூடும்.

மீனம்

பண வரத்து அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் உதவிக் கரம் கிடைக்கும். ஆடை அணிகலன்கள் சேரும். புதிய விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.