காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

பிறரை உயர்த்தும் மனம் கொண்டவர்கள் மகர ராசியினர்!

மகர ராசிக்காரர்களின் குண நலன்கள்..

News image
Updated On :7 மே 2026, 6:04 pm IST

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான பலமும் பலவீனமும் உண்டு. அவை லக்கினம், ராசி மற்றும் கிரகங்களின் தொடர்புகள் பொறுத்து மாறும். அந்தவகையில், பிறரை உயர்த்த நினைப்பவர்கள் மகர லக்கினத்தவர்கள்.

உதவியே அவர்களின் பலம். அதனால் இவர்களின் மதிப்பு என்றும் குறையாது. மகர ராசியில் பிறந்தவர்கள் நீளமான, உருண்ட விழிகளும் செந்நிற மேனியும் உடையவர்கள். சிலருக்கு மறைமுக அங்கங்களில் மச்சம் காணப்படும். வாசனைத் திரவியங்கள், புஷ்பங்கள் மீது விருப்பம் அதிகம். ஆண்கள் பலமிக்க உடல் அமைப்பும் நல்ல ஆரோக்கியமும் உடையவர்கள். வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஆர்வம் காணப்படும். இந்த கட்டத்தில் மனத்தைக் குறிக்கும்

சந்திரன் நட்சத்திரமான திருவோணம் 4 பாதங்களும், நெருப்பு கிரகமான சூரியன் நட்சத்திரமான உத்திராடம் 2, 3, 4 பாதங்களும், மேலும் மங்களக்காரரான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் 1, 2 பாதங்களும் மகரத்தில் அமர்ந்துள்ளன.

இந்த இடத்தில் நெருப்பு தன்மை கொண்ட கிரகங்களின் ஆதிக்கம் அதிகம். இதன் விளைவாக, செயலில் வேகம் அதிகரிக்கும். அதே நேரத்தில், சில சமயம் அவசரமான முடிவுகள் எடுக்கப்படும். சந்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், லக்னாதிபதியோடு பாவிகளின் சேர்க்கை உள்ளவர்களுக்கும் குறிப்பாக 7ம் அதிபதி சந்திரன் பலம் குறைந்தால் - பெண்கள் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, மகர ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் "நில்-கவனி-செல்" என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவது அவசியம். காலபுருஷ தத்துவப்படி, மகரம் 10ம் வீட்டைக் குறிக்கும். இந்த பாவம் தொழில் பாதை, கர்மவினை, சமூக அந்தஸ்து, லட்சியம், வாழ்க்கையின் முக்கிய பொறுப்புகளைக் குறிக்கும் இடம். ஒருவரின் பிறவிப் பலன்கள் இவ்விடத்தில் தெளிவாக வெளிப்படும்.

ஜாதகத்தில் மகர ராசி அதிபதி சனிபகவான் மெதுவாகச் சஞ்சரிக்கும் கிரகம். கோச்சாரப்படி சனி நீண்ட ஆண்டுகள் பயணிக்கும். அதே சமயம், செவ்வாய் இங்கு உச்சம். இந்த ராசிக்காரர்கள் வேலையில் நல்ல ஆர்வம் கொண்டவர்கள். சில நேரங்களில் செயல் முடிந்த பின் அவமானம் அல்லது தாழ்வு நிலை வரலாம், ஆனால் அதே அனுபவம் முன்னேற்றத்திற்கு வழி காட்டும். பிடிவாதம், கள்ளம் கபடம் இவர்களுக்கு எதிரி. ஆகவே எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

சம்பாதிப்பு பெரும்பாலும் குடும்பத்திற்கே செலவாகும். குருவின் பார்வை இருந்தாலும், சனி குறிக்கும் உடல் பகுதிகளில் சில குறைபாடுகள் தோன்றலாம். சனி அழுக்கு நீரைக் குறிக்கும் என்பதால், கிருமி காரணமான கொப்புளங்கள் அல்லது கட்டிகள் உருவாக வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் அவை தீவிரமாக மாறும் அபாயமும் உள்ளது (எ.கா. கேன்சர் கட்டி). ஆகையால், சிறிய கட்டியாக இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் பரிசோதிப்பது அவசியம். இவர்களுக்கு முகம், கண், தோல் பிரச்னைகள் மற்றும் மூட்டுவலி வர வாய்ப்பு உண்டு.

சனி-சந்திரன் தொடர்பு இருந்தால் புனர்பூ தோஷம் வெளிப்படும். மேலும், சனி மற்றும் சந்திரன் மாரகாதிபதிகளாக அமைந்தால், அவை மாரகத்திற்குச் சமமான தீவிர விளைவுகளை உருவாக்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படலாம். சந்திரன் இவர்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதியாக இருப்பதால், வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். நினைப்பது ஒன்றாகவும், செய்வது வேறாகவும் அமைவது உண்டு. மனம் திறந்து பேசும் குணம் சில நேரங்களில் அவர்களுக்கே பிரச்னையாக முடியும். சீரான சிந்தனையை நிலைநிறுத்துவது கடினமாக இருக்கலாம். பொருத்தமில்லாத திருமணம் மன அமைதியைக் குலைக்கலாம். இவை அனைத்தும் பிற கிரகங்களின் நிலை, பார்வையைப் பொறுத்து மாறுபடும்.

மகர ராசி செவ்வாய்க்கு உச்சஸ்தானமாகும். இந்த ராசிக்குச் செவ்வாய் சதுர்த்த ஸ்தானமும், லாப ஸ்தானமுமான ஏகாதச ஸ்தானத்திற்கும் அதிபதியாவார் (4,11). உச்சபலத்துடன் கூடிய செவ்வாய் ஜாதகருக்கு அபரிமிதமான தைரியத்தையும், துடிப்பையும் அளித்து, தொழில் முயற்சிகளில் முன்னேற்றத்தை உண்டாக்கி, பொருள் லாபத்தை வளர்க்கின்றான். குறிப்பாக வீடு மனை தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு, அதன்மூலம் லாபம் அடையும் யோகம் உண்டாகும். பாரம்பரிய சொத்துக்கள் முதலியவற்றின் மீது ஈர்ப்பு உண்டாகி, அவற்றால் பயன் பெறுவான்.

சகோதரர் சகோதரிகளுடன் ஸ்நேகம் நிலைத்து, அவர்களால் உபகாரம், ஆதரவு ஆகியன கிடைக்கும். ஆயினும், மகர ராசிக்குச் செவ்வாய் பாதகாதிபதியாக இருப்பதனால், அவன் பலம் சில வேளைகளில் மறைமுக விரோதம், திடீர் தடைகள், அனுபவிக்கத் தகாத சூழ்நிலைகள் ஆகியவற்றை உண்டாக்கும். குறிப்பாக, வியாபாரம் தொடர்பான காரியங்களில் இடையூறு, தாமதம், இழப்பு போன்றவை ஏற்படக்கூடும். மேலும், செவ்வாய் அதிபலமடைந்திருந்தால், அவசர குணம், அதிரடித் தீர்மானம், கடுமையான செயல் ஆகியவற்றால் மாரகத்திற்குச் சமமான விளைவுகளை உண்டாக்கும். ஆனால் ஜாதகருக்கு அந்த கிரகத்தின் தசா புத்தியோ நடக்க வேண்டும்.

மகர ராசி மற்றும் லக்கினத்திற்கு குரு முயற்சி என்கிற மூன்றாம் ஸ்தானமும், விரய ஸ்தானமுமான 12ம் பாவாதிபதியாக விளங்குகின்றான். மேலும், இந்த ராசியில் குரு நீச்ச நிலையில் இருப்பதால், ஆன்மிகம், தர்மம், இரக்கம் ஆகிய குணங்கள் அதிகம் இருக்கும்; பிறருக்கு உதவும் மனப்பான்மை இயல்பாக இருக்கும். ஆனால், எதிர்மறை நண்பர்கள் காரணமாக ஏமாற்றம், நஷ்டம் ஏற்படலாம். புகழுக்காக அதிக செலவுகளும் செய்யலாம். குரு நீதி, ஞானம், ஆன்மிகம் ஆகியவற்றின் காரகன்; ஆனால் இங்கு நீச்சம் காரணமாகச் சேமிப்பு குறைவு, தீர்மான குழப்பம், தவறான ஆலோசனைகளை ஏற்கும் நிலை, செலவு அதிகரிப்பு போன்றவை ஏற்படும். ஆகையால், பெரியோரின் ஆசிர்வாதம் பெறுதல், தர்ம செயல்களில் ஈடுபடுதல் அவசியம்.

மகர ராசி மற்றும் லக்கினத்திற்கான சுக்கிரன் ஒரு முக்கியமான யோகர். அவர் பலமாக இருந்தால், கல்வி, தொழில், கலை மற்றும் சுகவாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். சமூக மரியாதை மற்றும் வசதிகள் அதிகரிக்கும். ஆனால் சுக்கிரன் பலம் குறைந்தால், குடும்ப வாழ்க்கை, காதல் மற்றும் தொழிலில் சிக்கல்கள் தோன்றும். ஆடம்பரச் செலவுகள் காரணமாகப் பொருளாதார சுமையும் ஏற்படலாம். மொத்தத்தில், சுக்கிரன் நிலைமையே மகர ராசிக்காரர்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். அதே சமயம், சுக்கிரன் சார்ந்த தொழில்களான நவீன ஆபரண அலங்கார அழகு சாதனப் பொருள்கள் விற்பனை, பியூட்டி பார்லர், வடிவமைப்பாளர், மற்றும் இரும்பு சம்பந்த துறைகளில் ஈடுபடுவார்.

மகரத்திற்கு நட்பு கிரகமான புதன் 6,9-க்கு உரியவர். புதன் பலமாக இருந்தால் புத்திசாலித்தனம், வாக்குச் சாதுரியம், பணவரவு, வாணிபம், கல்வி மற்றும் பாக்யம் ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். ஆனால் 6ம் பாவ அதிபதியாக இருப்பதால் வழக்குகள், எதிரிகள், உறவினரால் நஷ்டம், உடல் குறைகள் போன்ற சிக்கல்கள் வரலாம். இருப்பினும் புதன் பலமாக இருந்தால் இவற்றைச் சமாளித்து ஜெயிக்க முடியும்.

மகரத்திற்கு சூரியன் அஷ்டமாதிபதி. சூரியன் பலமாக இருந்தால் ஒழுக்கம், பொறுப்பு உணர்வு, ஆராய்ச்சி மனப்பான்மை, ரகசிய சிந்தனை, ஆயுள் பலம் மற்றும் திடீர் லாபங்கள் கிடைக்கும். பலமில்லையெனில் உடல் நலக்குறைவு, தன்னம்பிக்கை குறைவு, திடீர் இழப்புகள், குடும்ப சிக்கல்கள், பெற்றோருடன் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படலாம்.

மகர ராசிக்காரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்கள்..

சரியான குறிக்கோள், ஒழுக்கம், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, திட்டமிட்டு உழைப்பு, சுய முன்னேற்றம் மற்றும் தலைமைப் பண்பு. ஞானிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, அனுபவத்தை ஆசிரியராக எடுத்துக்கொண்டால் உயர்வு நிச்சயம். இவர்களுக்குச் சிறந்த ஆசிரியர் அனுபவமே.

மகர ராசிக்காரர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது மிகவும் நன்று. அவ்வப்போது திருப்பதி, சபரிமலை, பிள்ளையார்பட்டி, உப்பிலியப்பன் கோயில் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வது கர்ம நிவர்த்திக்கு உதவும். மேலும், சித்தர்கள் மற்றும் தக்ஷிணாமூர்த்தி வழிபாட்டை வியாழக்கிழமைகளில் செய்தால் ஞானம், தெளிவு, மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் தடைகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Whatsapp:8939115647

vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.