

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. அரசியல் துறையினருக்கு மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மன் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.