3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உயர்வான எண்ணங்களுடன் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். கலைத்துறையினர் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று மஞ்சள் பொடியால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.