
அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 2
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
இரக்க சிந்தனை கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த இழுபறியான நிலை மாறும். சாதாரணமாக செயல்பட்டாலும் அது மிகப் பெரிய வெற்றி பெறும். வாகனப் பிராப்தி ஏற்படும்.
எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் இருந்த தடங்கல்கள் அகலும். பணவரத்து கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெருமைகள் உண்டாகும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். அரசியல்துறையினருக்கு எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்..
பரிகாரம்: திங்கட்கிழமை ராகு காலத்தில் அம்மனை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





