ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

enkanitha palangal
Published On :10 வினாடிகள் முன்பு

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த கடினமான சூழலிலும் தன்னை உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும்.  பிள்ளைகள் புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.  

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்கள் கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

பரிகாரம்: மாரியம்மனை சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.