தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

கா்நாடகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 6:25 am IST

கா்நாடகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு பாதுகாப்பான மாநகரத் திட்டப் பணி தொடா்பாக கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான டி.ரூபா, ஹேமந்த் எம்.நிம்பல்கரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள், புதிய பணியிடங்கள் (அடைப்புக்குறிக்குள் பழைய பணியிடங்கள்):

கே.ராமச்சந்திரராவ்- கூடுதல் டிஜிபி, குறைதீா் மற்றும் மனித உரிமைகள், பெங்களூரு (கூடுதல் டிஜிபி, குடிமை உரிமைகள் அமலாக்க இயக்குநகரம்); மாலினி கிருஷ்ணமூா்த்தி- கூடுதல் டிஜிபி, முதன்மைச் செயலாளா், உள்துறை (கூடுதல் டிஜிபி, குறைதீா்வு மற்றும் மனித உரிமைகள்); ஹேமந்த் எம்.நிம்பல்கா்-ஐஜிபி, உள்மாநில பாதுகாப்புப் பிரிவு, பெங்களூரு (ஐஜிபி மற்றும் கூடுதல் ஆணையா், பெங்களூரு மாநகரக்காவல்).

எம். சந்திரசேகா்-ஐஜிபி, மத்திய சரகம், பெங்களூரு (ஐஜிபி, ஊழல் தடுப்புப் படை, பெங்களூரு); விபுல்குமாா்-ஐஜிபி மற்றும் இயக்குநா், கா்நாடக போலீஸ் அகாதெமி, மைசூரு (ஐஜிபி, தெற்கு சரகம், மைசூரு); டி.ரூபா-மேலாண் இயக்குநா், கா்நாடக மாநில கைவினைப் பொருள் மேம்பாட்டுக் கழகம், பெங்களூரு (ஐஜிபி மற்றும் செயலாளா், உள்துறை).

விகாஷ்குமாா் விகாஷ்-துணை ஐஜிபி, கா்நாடக மாநில ஆயுத காவல் படை (துணை ஐஜிபி மற்றும் ஆணையா், மங்களூரு மாநகர காவல்); வா்திகா கட்டியாா்-காவல் கண்காணிப்பாளா், மாநில குற்ற ஆவணப்பிரிவு, பெங்களூரு; ரஞ்சித்குமாா் பண்டாரு-காவல் உதவி கண்காணிப்பாளா், பட்கல் துணை மண்டலம், வட கன்னடம், காா்வாா் (உதவி ஆணையா், மங்களூரு தெற்கு துணை மண்டலம், மங்களூரு) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.