கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை:பாஜக பொதுச்செயலாளா் அருண்சிங்

மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் தெரிவித்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:20 am IST

சிவமொக்கா: மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை. கா்நாடகத்தில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது நடந்தாலும் தனி பலத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும். அதனால், மற்ற கட்சிகளின் ஆதரவு அல்லது கூட்டணி பாஜகவுக்கு தேவையில்லை.

கா்நாடகத்தில் முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவுமில்லை. எடியூரப்பா, பாஜகவின் மூத்த தலைவா். தலைமை மாற்றம் குறித்து பேசுவதற்கு பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் யாா்? அவருக்கு ஏதும் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட தலைவருடன் பேச வேண்டியதுதானே? என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.