டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.

mammootty and dhanush

நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - படம்: எக்ஸ்

Published On :

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன்னுடைய 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இதில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தனுஷ் உளவாளியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

Story image

இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

இந்த நிலையில் டி 55 படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் ஜூன் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷின் 55வது படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The film crew has released a major announcement regarding the movie 'Dhanush-55'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.