/

விஜய் சேதுபதி வெளியிட்ட டெலிவரி பாய் படத்தின் டீசர்!

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட டெலிவரி பாய் படத்தின் டீசர் குறித்து...

News image

டெலிவரி பாய் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / லியோ சிவக்குமார்

Updated On :3 ஜூலை 2026, 5:23 pm IST

நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ’டெலிவரி பாய்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை நானி எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தினை ஆசை கிரியேஷன்ஸ், சண்டி டாக்கீஸ் சார்பாக அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன் தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் பிரிகடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் ஜூலை மாதத்தில் வெளியாகுமென அறிவித்துள்ளார்கள். ஆனால், தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளதால், விரைவில் அப்டேட் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Leo Sivakumar Radhika Sarathkumar starring Delivery Boy teaser released by Vijay Sethupathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.