கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

வேதாந்தா குழுமத்திலிருந்து பிரிக்கப்பட்ட 4 புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இன்று பட்டியலிடப்பட்டது.

News image

Vedanta Group

Updated On :15 ஜூன் 2026, 7:25 pm IST

புதுதில்லி: வேதாந்தா குழுமத்திலிருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட நான்கு புதிய நிறுவனங்களான வேதாந்தா அலுமினியம் மெட்டல் லிமிடெட், வேதாந்தா பவர் லிமிடெட், வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ் லிமிடெட் மற்றும் வேதாந்தா அயர்ன் & ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களாக பங்குச் சந்தையில் இன்று பட்டியலிடப்பட்டது.

வேதாந்தா அலுமினியம் மெட்டல் நிறுவனத்தின் பங்குகள் ரூ. 527 க்கு வர்த்தகத்தைத் தொடங்ய நிலையில், பிறகான வர்த்தகத்தில் அதன் தொடக்க விலையிலிருந்து 5 சதவீதம் சரிந்து, மும்பை பங்குச் சந்தையில் ரூ. 500.65 என்ற குறைந்தபட்ச வரம்பு நிலையை எட்டியது.

வேதாந்தா பவர் நிறுவனம் ரூ. 41.30-க்கு பட்டியலிடப்பட்டு, வர்த்தக முடிவில் 0.84 சதவீதம் சரிந்து ரூ. 40.95 ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இந்த பங்கு 4.96 சதவீதம் உயர்ந்து ரூ. 43.35 ஐ எட்டியது.

வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் ரூ. 39 க்கு வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில், அதன் தொடக்க விலையிலிருந்து 5 சதவீதம் சரிந்து ரூ. 37.05 என்ற குறைந்தபட்ச வரம்பை எட்டியது.

வேதாந்தா அயர்ன் & ஸ்டீல் பங்குகள் ரூ. 22.25 க்கு பட்டியலிடப்பட்டு, பிறகான வர்த்தகத்தில் 5.39 சதவீதம் சரிந்து ரூ. 21.05 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த 4 பங்குகளும் நிஃப்டியிலும் பட்டியலிடப்பட்டன.

நிஃப்டி-யில் வேதாந்தா அலுமினியம் மெட்டல் ரூ. 522 க்கும், வேதாந்தா பவர் ரூ. 41.80 க்கும், வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ் ரூ. 38 க்கும், வேதாந்தா அயர்ன் & ஸ்டீல் ரூ. 20 க்கும் வர்த்தகத்தைத் தொடங்கின.

வர்த்தக முடிவில், வேதாந்தா அலுமினியம் மெட்டல் 5 சதவீதம் சரிந்து ரூ. 495.90 ஆகவும், வேதாந்தா பவர் 2 சதவீதம் சரிந்து ரூ. 40.94 ஆகவும், வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ் 5 சதவீதம் சரிந்து ரூ. 36.10 ஆகவும் மற்றும் வேதாந்தா அயர்ன் & ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு 5.3 சதவீதம் உயர்ந்து ரூ. 21.06 ஆக நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில், வேதாந்தா அலுமினியம் மெட்டல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1,95,773.58 கோடியாகவும், வேதாந்தா பவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 16,013.04 கோடியாகவும், வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 14,487.99 கோடியாகவும், வேதாந்தா அயர்ன் & ஸ்டீல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 8,231.37 கோடியாக பதிவானது.

புதிதாகப் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனங்களுடன் இணைந்து, தாய் நிறுவனமான வேதாந்தா லிமிடெட், குழுமத்தின் முதன்மைப் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகத் தொடர்ந்து செயல்படும்.

Summary

Vedanta group 4 demerged firms debut on stock exchanges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.