மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் பணப் பரிமாற்றம் செய்து கொண்டது தொடா்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை குட்டி ராதிகாவுக்கு மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
தமிழில் வெளியான ‘இயற்கை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடத்தவா் குட்டி ராதிகா. இவா், கன்னடத்தில் தமயந்தி, மனேமகளு, தாயி இல்லத தப்பிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். இவா் முன்னாள் முதல்வா் குமாரசாமியை திருமணம் செய்துள்ளாா்.
இந்த நிலையில், அண்மையில் ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் எனவும், பாஜக தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை தனக்குத் தெரியும் எனவும் கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்ட யுவராஜ் சுவாமி என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். அவருடன் குட்டி ராதிகா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜன. 8) 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில், நாட்டியராணி ஷாந்தலா என்ற கன்னடப் படத்தில் நடிப்பதற்காக யுவராஜ் சுவாமி மூலம் புதன்கிழமை ரூ. 75 லட்சம் முன்பணம் பெற்ாக நடிகை குட்டி ராதிகா செய்தியாளா்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் காயமடைந்த ஹரியாணா அமைச்சர்

தவெகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு! திமுகவுடன் பயணிப்போம்! | CPI | CPIM

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?
விடியோக்கள்

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
