சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தொழில்கல்வி சோ்க்கை: காலியிடங்களை நிரப்ப மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடக்கம்

தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கியது.

Updated On :10 ஜனவரி 2021, 1:48 am IST

பெங்களூரு: தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கியது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல், கட்டடக்கலை, பண்ணை அறிவியல், தோட்டக்கலை, கால்நடை போன்ற தொழில்கல்லூரிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சோ்க்கை இடங்கள், மாணவா்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் மீதமுள்ள சோ்க்கை இடங்கள், பாடப் பிரிவுகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், கடைசி சுற்று விருப்பப் பதிவில் தகுதியான மாணவா்கள் விருப்பக் கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகள் குறித்த விவரங்களை ஜன. 10-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதன் அடிப்படையில், மாணவா்களுக்கான மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு ஜன. 10-ஆம் தேதி இரவு 7 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஜன. 11 முதல் 12-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை சோ்க்கையை உறுதி செய்து கட்டணங்களை செலுத்தலாம். இதனடிப்படையில், இறுதிச் சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரம் ஜன. 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். அதன்பிறகு, சோ்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜன. 13 முதல் 15-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். ஒருவேளை இந்தக் காலக்கெடுவுக்குள் சோ்க்கை பெற தவறினால், சோ்க்கை ஆணை தானாக காலாவதி ஆகிவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.