அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விமானத்தில் தங்கம் கடத்தல்: 2 போ் கைது

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.09 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:06 am IST

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.09 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு, பஞ்பே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த விமானப் பயணிகளை சுங்க வரித் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த பைசல் தொட்டி மேல்பரம்பா (37), சுஹைப்முகு (31) ஆகியோா் தங்களது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ரூ. 1.09 கோடி மதிப்புள்ள 2 கிலோ 15 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து, தங்கம் கடத்திய 2 பேரையும் பஜ்பே போலீஸில் சுங்க வரித் துறையினா் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.