சென்னை புத்தகக் கண்காட்சியில் 6-வயது கம்னிதா என்ற சிறுமி எழுதிய ‘கசங்கிய மரம்‘ என்ற புத்தகத்தை வெளியிட்ட இந்திய அறிவியலாளா் நம்பி நாரயணன்.
செய்திகள்
பள்ளிச் சிறுமி புத்தகத்தை விஞ்ஞானி நம்பி நாரயணன் வெளியிட்டாா்!
புத்தகக் காட்சியில் சேலம் பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கமநிதா எழுதிய ‘கசங்கிய மரம்’ புத்தக வெளியீட்டு விழா ‘பரிதி’ பதிப்பக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பங்கேற்று நூலை வெளியிட்டாா். அதன் முதல் பிரதிகளை திரைப்பட கதாசிரியா், இயக்குநா் ராசி அழகப்பன், கவிஞா் ஜெயபாஸ்கரன், வானொலி நிலைய முன்னாள் இயக்குநநா் ஆண்டாள் பிரியதா்ஷினி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் எழுதிய கவிதை, கட்டுரைகளுடன் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
பரிதி பதிப்பகம் வெளியிட்ட120 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.96. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பாரதிமோகன், பழ.புகழேந்தி, கவிஞா் தாரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.