பொக்கிஷம்!

தொடக்கப் பள்ளிப் பருவத்திலேயே பொதுப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.
பொக்கிஷம்!
Updated on
1 min read

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

தொடக்கப் பள்ளிப் பருவத்திலேயே பொதுப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். நாளிதழ்களையும் அக்காலகட்டத்தில் வாசிப்பேன். கல்லூரிப் பருவத்தில் ஷேக்ஸ்பியரின் நாடக நூல்களை விரும்பிப் படித்தேன். அதையடுத்து எழுத்துப் பணியில் ஈடுபட்ட நிலையில் தமிழக, தேசிய, உலக அளவிலான நாவல்களைப் படிப்பதில் ஆர்வமடைந்தேன். ரஷிய நாவல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதே சமயத்தில் கலாசாரம், மக்கள் வாழ்வியல் உள்ளிட்டவை சம்பந்தமான நாவல்களையும் படித்து வருகிறேன்.

எனது நூலகத்தில் உள்ள புத்தகங்களில் நாவல்களே அதிகம் உள்ளன. டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' போன்ற நாவல்களைப் படித்துள்ளேன். தற்போது 30 ஆயிரம் புத்தகங்கள் எனது நூலகத்தில் உள்ளன. அதில் எப்போதாவது படிப்பது, தேர்வு செய்து படிப்பது மற்றும் விருப்பப்படி அடிக்கடி படிக்கும் 100 நூல்கள் என வகை பிரித்து, அடுக்கி வைத்துப் படித்து வருகிறேன்.

விருப்பப்படி படிக்கும் நூல்களில் முதல் பத்து நூல்களாக அந்துவான் எக்சுபரி எழுதி தமிழில் வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த "குட்டி இளவரசன்', ஹெப்ஸிபா ஜேசுதாசனின் "மா-னீ', நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட டோட்டோ சானின் "ஜன்னலில் ஒரு சிறுமி', த.வெ.பத்மாவின் "கனவினைப் பின் தொடர்ந்து', கி.ராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்', ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி', விட்டல் ராவின் "தமிழகக் கோட்டைகள்', பீகாக் பதிப்பகத்தின் "மெüனி கதைகள்' ஆகியவற்றை அடிக்கடி படிப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com