

வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
கதை சொல்லி இதழாசிரியர்.
பள்ளிக் காலங்களில் வீட்டில் தினமணி உள்ளிட்ட நாளிதழ்களைப் படித்தேன். அன்றிலிருந்தே எனக்குப் படிப்பார்வம் தொற்றியது; எழுத்து ஆசையும் வந்தது. கல்லூரிக் காலங்களில் பாலஸ்தீன பிரச்னை குறித்த எனது முதல் கட்டுரை தினமணியில்தான் வெளியானது.
நான் ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்தாலும், பாரதி கவிதைகள், கி.வா.ஜகந்நாதனின் "தமிழ் மொழிகள்', வின்ஸ்ட்டன் சர்ச்சிலின் "இங்கிலாந்து வரலாறு', காந்தியின் "மை எக்ஸ்பெரிமென்ட் வித் ட்ரூத்', சாவர்க்கரின் "எரிமலை', நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு, சியாமா பிரசாத் முகர்ஜியின் "பயணங்கள்', மறைந்த பிரதமர் வாஜ்பாயின் "மை ஸ்பீச்சஸ் இன் பார்லிமென்ட்' 3 தொகுதிகள், நிர்மலா லட்சுமணின் "தி தமிழ்ஸ்', ரசிகமணி டி.கே.எஸ்.ஸின் "கம்பர் தரும் ராமாயணம்', ஜெர்பன்டோவின் ஆங்கிலப் புனைவு நூலான "டான் குன்சாட்', கிருஷ்ணா ஆங்கிலத்தில் எழுதிய "சர்தார் படேல்' வரலாறு, பகத் சிங்கின் வரலாறும், அவரது கடிதங்களும் தொகுப்பு மற்றும் சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய "ஏ டேல் ஆஃப் டூ சிட்டிஸ்' ஆகியவற்றை விரும்பிப் படித்துள்ளேன்.
வீட்டு நூலகத்தில் ஆங்கில, தமிழ் அகராதிகள், இந்திய அரசமைப்புச் சட்ட கையெழுத்து நூல் ஆகியவையும் உள்ளன.
கி.ரா.வின் கதை சொல்லி காலாண்டிதழை தொடர்ந்து நடத்தி வருகிறேன். பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், அரசியல் என அனைத்துப் பிரிவு நூல்களையும் விரும்பிப் படிப்பேன். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது படிக்க நேரம் ஒதுக்கிவிடுவேன். எனது நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறப்பாகச் செயல்படும் நூலகத்துக்கு வழங்கி, அவற்றைப் பராமரிப்பதற்கான நிதியையும் வழங்கத் திட்டமிட்டுள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.