வாசிக்க வாங்கியவை!

Updated on
1 min read

வி.ஷாலினி,

சமூக சேவகி, சென்னை.

ஆங்கில நாவல், முற்போக்கு கருத்துடையவற்றையும் சிறுகதைகளையும் விரும்பிப் படிப்பேன். தற்போது, அ.சோபலெவ், கி.ஷினியா, ஃபி.ஃபீர்சவ் ஆகியோர் எழுதி, தமிழில் ரா.கிருஷ்ணய்யா மொழிபெயர்த்துள்ள "கம்யூனிஸ்ட் அகிலம்', பெüலோ கொய்லோ எழுதிய "தி ஆல்கெமிஸ்ட்', டேல் கார்னெகி எழுதிய "ஹெü டு ஸ்டாப் வொரியிங் அண்ட் ஸ்டார்ட் லிவிங்', "புதுமைப்பித்தனின் சிறுகதைகள்' ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

மு.செல்வகுமார், சேலம், ஆத்தூர்.

பாரசீகக் காவியமான கெ.பணிக்கர் எழுதி தமிழிலில் இராம. குருநாதனால் மொழிபெயர்க்கப்பட்ட "தற்கால இந்திய ஆங்கிலக் கவிதைகள்', கவிஞர் வெண்ணிலா தொகுத்துள்ள "கனவும் விடியும்' (நவீன கவிதைகள் தொகுப்பு), ரஷிய எழுத்தாளர் இவான் துர்கனேவ் எழுதிய "தந்தையரும் தனயர்களும்' நாவல், சே.கரும்பாயிரம் பதிப்பித்துள்ள புல்லங்காடனாரின் "கைந்நிலை மூலமும் உரையும்' ஆகியவற்றை வாங்கினேன்.

வி.மதுஸ்ரீ,

நீட் பயிற்சி மாணவி

மாதவரம்.

புனைகதைகளை விரும்பிப் படிப்பேன். ஆங்கிலத்தில் நாவல்கள் உள்ளிட்டவற்றைப் படிப்பதில் விருப்பம். புத்தகக் காட்சியில் ஜேன் ஆஸ்டென் எழுதிய "பிரைட் அண்ட் பிரஜுடிஸ்' நாவலையும், கால் நியூபோர்ட் எழுதிய "டீப் ஒர்க்' தன்னம்பிக்கை நூலையும், எலைஸô லே ரையன் எழுதிய "சூப்பர் மைன்ட்ஃபுல்', புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் ஸ்ரீ அன்னை எழுதிய "தி சன்லைட் பாத்' ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

த.அஜந்தகுமார்,

விரிவுரையாளர், யாழ்ப்பாணம், இலங்கை.

காலச்சுவடு வெளியீடான "சுந்தர ராமசாமியின் சிறுகதைகள்', "கு.ப.ரா.வின் சிறுகதைகள்', சு.ராஜவேலுவின் "சங்க காலக் கடற்கரையோரக் குடியிருப்புகளும் துறைமுகங்களும் - ராமேஸ்வரம் முதல்பூம்புகார் வரை', ந.அதியமானின் "சங்க காலக் கடற்கரையோரக் குடில்களும் துறைமுகங்களும்-கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை' ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com