

ஜோ.கோதை,
மாணவி, கோடம்பாக்கம்.
சிறுகதைகளை விரும்பிப் படிப்பேன். புத்தகக் காட்சியில் சரிதா ஜோவின் "பேயாவது பிசாசாவது', எஸ்.ராமகிருஷ்ணனின் "பொம்மை பேரரசன்', உதயசங்கர் மொழிபெயர்ப்பில் "தவளை ராஜாவும் அரிசிப் பூக்களும்' (அற்புத நாட்டுப்புறக் கதைகள்), மைதிலி மொழி சிறார் கதைகளின் தொகுப்பான "கிளியும் அதன் தாத்தாவும்', கதைப் பித்தனின் தொகுப்பு மொழியாக்கத்தில் "புத்திசாலி பொற்கொல்லன்' ஆகியவற்றை வாங்கினேன்.
திரைப்பட இயக்குநர் வசந்தபாலன்,
சென்னை.
கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்து இலக்கியங்களையும் படிக்கும் பழக்கம் உண்டு. தற்போது இசை எழுத்தில் "நறுமணத்துயிரே!', ஜெயமோகனின் "காவியம்', எஸ்.ராமகிருஷ்ணனின் "குற்றமுகங்கள்', ரமேஷ் பிரேதனின் "ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து', வேல்முருகன் இளங்கோவின் "இரவாடிய திருமேனி' நாவல் ஆகியவற்றை வாங்கினேன்.
ஆர்.ஜான்சன்,
முன்னாள் கடற்படை வீரர்,
சென்னை.
தமிழ் சார்ந்த நூல்களை வாங்கிப் படித்து வருகிறேன். அதன்படி, ம.சோ.விக்டரின்
"பஃறுளி முதல் சிந்து வரை', தொ.பரமசிவன் எழுதிய "அறியப்படாத தமிழகம்', முனைவர் பெ.நிர்மலாவின் "தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்', பெ.மணியரசன், கி.வெங்கட்ராமன் எழுதிய "தமிழரா, திராவிடரா?' ஆகிய நூல்களை வாங்கினேன்.
வி.முருகன்
தொழிலதிபர், திருச்சி.
தமிழ் பண்பாட்டு ஆய்வு எழுத்தாளர்
சா.பாலுச்சாமியின் "தமிழ்நாட்டு சமண ஓவியங்கள்', "தமிழ்நாட்டு மரச்சிற்பங்கள்', "திருப்புடை மருதூர் ஓவியங்கள்', பெ.சுயம்புவின் "உ.வே.சா. நாட்குறிப்பு', ஆ.பத்மாவதியின் "புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு' ஆகியவற்றை வாங்கினேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.