

ஜி.தமிழ்ச்செல்வன் (28), திரைப்பட நடிகர், சேலம்.
தமிழில் திரில்லர் கதைகள், நாவல்களை அதிகம் படிப்பேன். தற்போது ராஜேஷ்குமாரின் "நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்க்கா', "சுவாசிக்க நேரமில்லை' நாவல் இரண்டு தொகுதிகளை வாங்கினேன்.
குகஸ்ரீ (13), பள்ளி மாணவி, சென்னை.
நாவல்கள், சிறுகதைகள் படிப்பேன். தற்போது வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம், சு.வெங்கடேசனின் "வேள்பாரி', ஜெஃப் கின்னே எழுதிய "டயரி ஆஃப் எ விம்பி கிட்', கல்கியின் "பொன்னியின் செல்வன்' மற்றும் பாபு புருஷோத்தமனின் "வாழ்வின் இலக்கு தூரமில்ல... தொட்டுவிடலாம்' ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.
ச.வசீகரன் (24), வழக்குரைஞர், கும்பகோணம்.
பொதுவுடைமை சார்ந்த நூல்களை விரும்பிப் படிப்பேன். தற்போது சாமி.தியாகராஜனின் "தொல்காப்பியச் செய்தி', செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டி.ஆர்.தாமோதரனின் செüராஷ்டிர மொழி திருக்குறள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எம்.வி.வெங்கட்ராமனின் "காதுகள்', தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான முனைவர் மோ.கோ.கோவைமணி, பெரும்புலவர் ப.வெ.நாகராஜன் ஆகியோர் எழுதிய "திருக்குறள் ஆய்வு மாலை', முனைவர் பழ.முத்து வீரப்பன் எழுதிய "திருக்குறள் பொருட்
களஞ்சியம்' ஆகியவற்றை வாங்கினேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.