டாஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு 2012-ஆம் ஆண்டுக்கான சிறந்த தொழில் சிந்தனையுள்ள தொழிலதிபர் விருதை திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா வழங்கினார்.
என்.டி.டி.வி. புராஃபிட் பிஸினஸ் லீடர்ஷிப் சிறந்த தொழில் சிந்தனை விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருதுக்கு மல்லிகா ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடினமான சூழலில் டாஃபே நிறுவனத்தை தமது சிறப்பான தலைமைப் பண்புகளுடன் முன்னேறச் செய்து, தற்போதுள்ள உயரிய இடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளமைக்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
டாஃபே இந்தியாவின் இரண்டாவது பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாகவும் உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ளது. விருதினைப் பெற்றுக் கொண்ட மல்லிகா ஸ்ரீநிவாசன் தெரிவித்தது: லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், சமூக மேம்பாட்டுக்காக ஒரு நிறுவனம் தனது பங்களிப்பை சிறந்த முறையில் அளிக்க வேண்டும். எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்துதல், உணவுப் பொருள் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவைதான் இந்திய வேளாண் துறையை முன்னேறச் செய்யும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

கடலூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது! சீமான்

முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



