ஜப்பான் ஆட்டோ மொபைல் நிறுவனமான ஹோண்டா, டீசலில் செயல்படும் "அமேஸ்' காரை வியாழக்கிழமை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் டீசல் கார் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புது தில்லியில் இந்திய ஹோண்டா கார் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல்அதிகாரியுமான ஹிரோநோரி கநயாமா தெரிவித்தது: இந்திய வாடிக்கையாளரின் தேவையை அடிப்படையாக கொண்டு அமேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. டீசல் ரக அமேஸ் ஒரு லிட்டர் டீசலுக்கு 25.8 கி.மீ. தூரம் செல்லும் திறன்கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் ரக அமேஸ், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 கி.மீ. தூரம் செல்லக் கூடியது. டீசல் காரின் புது தில்லி விற்பனையக விலை ரூ. 5.99 லட்சம் முதல் ரூ. 7.60 லட்சம் வரை இருக்கும். பெட்ரோல் ரக காரின் விற்பனையக விலை ரூ. 4.99 லட்சம் முதல் ரூ. 7.50 லட்சம் வரை இருக்கும்.
2014-ஆம் ஆண்டுக்குள் ஹோண்டாவின் இந்திய செயல்பாடுகளில் கூடுதலாக ரூ. 2,500 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹோண்டா ஆலையில் புதிய கார் அசெம்பிளி வரிசை, டீசல் என்ஜின் உற்பத்தி ஆகியவற்றில் இந்த தொகை முதலீடு செய்யப்படும் என்றார்.
நான்கு மீட்டர் நீளத்துக்கும் குறைவாக உள்ள, 1200 சிசி அளவுகொண்ட பெட்ரோல் என்ஜின் கார் அல்லது 1500 சிசி அளவுகொண்ட டீசல் என்ஜின் காருக்கு தற்போது 12 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் விற்கும் மாடலாக அமேஸ் வளர்ச்சி பெறும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஹோண்டாவின் அமேஸ் மாடல்,மாருதி சுஸýகி டிஸயருக்குப் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


