எஃப் அண்ட் பி குழுமமான ஓரியண்டல் குசைன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 விற்பனையகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் பிரெஞ்ச் லோஃப் என்ற பெயரில் விற்பனையகங்களைத் திறந்து வருகிறது.
பேக்கரி மட்டுமின்றி ஜப்பானிய, தாய், சீன, ஸ்பானிஷ் மற்றும் கேரள உணவு வகைகள் வரை அனைத்தும் இந்த விற்பனையகங்களில் கிடைக்கும். இதன் மூலம் தனது 7 பிராண்டுகளையும் ஓரியண்டல் குசைன்ஸ் பிரபலப்படுத்த உள்ளது. புதிய விற்பனையகங்கள் தமிழகம், கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கத்தில் திறக்கப்பட உள்ளன.
ஓசிபிஎல் நிறுவனம் தற்போது பெஞ்சரோங், டெப்பான், எண்டே கேரளம், சீனா டவுன், ஜாரா தபஸ் பார், தி பிரெஞ்ச் லோஃப், லி சாக்லேட்டையர், வாங்க்ஸ் கிச்சன், பிளானட் யம், கெபாப் ஹவுஸ் மற்றும் ஹோட்டல் ஓரியண்டல் இன் ஆகிய உணவங்கள் உள்ளிட்ட 100 விற்பனையகங்களை இக்குழுமம் நிர்வகிக்கிறது. தற்போது 50 பிரெஞ்ச் லோஃப் விற்பனையகங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










