மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 112 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, சென்செக்ஸ் குறியீடு 20,111 என்ற அளவில் நிலைத்தது.
வீட்டு வசதி, ஆட்டோமொபைல் துறை, வங்கித் துறை பங்குகள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது லாபகரமான பாதையில் இருந்த சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 20,308 புள்ளிகள் என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆயினும் பின்னர், முதலீட்டாளர்கள் வேகமாக லாபம் பெறும் நோக்குடன் பங்குகளை விற்கத் தொடங்கியதில் 112 புள்ளிகள் சரிந்து 20,111 என்ற அளவில் வர்த்தக முடிவின்போது நிலைத்தது. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை 62 புள்ளிகள் சரிந்ததை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சரிவேற்பட்டுள்ளது.
முப்பது முக்கிய நிறுவனங்களின் பட்டியலான சென்செக்ஸ் குறியீடு சென்ற வாரம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் லாபகரமாக உயர்ந்து, இரண்டரை ஆண்டு அளவிலேயே மிக அதிகபட்ச நிலையைத் தொட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
டாடா மோட்டர்ஸ், ஐ.டி.சி., ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எஃப்.சி. வங்கி, ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி மட்டுமே சென்செக்ஸ் குறியீட்டில் நூறு புள்ளிகளுக்கு மேல் சரியக் காரணமாக இருந்தது.
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸýகியில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்திருந்த முதலீட்டில் 2.53 சதவீத அளவை கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து விற்றுவந்துள்ளது என்ற விவரத்தினால் மாருதி சுஸýகியின் பங்கு விலையில் சரிவேற்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில், 50 முக்கிய நிறுவனங்களின் பங்குப் பட்டியலான நிஃப்டியில் 42 புள்ளிகள் குறைந்து 6,114 என்ற அளவில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மதுரை மத்தியம்: தக்க வைப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

