தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துவருகின்றன என்று மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
புது தில்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார பிரிவுச்
செயலர் அரவிந்த் மாயாராம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
கடந்த ஒரு வார காலத்தில் தங்கம் இறக்குமதி செய்வதற்காக அன்னிய செலாவணி பயன்படுத்தப்படுவது வெகுவாக குறைந்திருக்கிறது. கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பு, ஒரு நாளில் சராசரியாக, அதிகபட்சம் ரூ. 1,135 கோடி மதிப்பிலான அன்னிய செலாவணி தங்க இறக்குமதிக்காக தேவைப்பட்டது.
அது இப்போது ரூ. 225 கோடியாக குறைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் ரூ. 38 கோடிக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கம் வாங்குவதற்கு அன்னிய செலாவணி பயன்படுவது வெகுவாக குறைந்துள்ளது பொருளாதார அளவில் நல்ல செய்தியாகும்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிக அளவில் இருப்பது மத்திய அரசை கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக தங்கம் இறக்குமதிகளுக்கான சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இறக்குமதிக்கான சுங்க வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்வதற்கு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
2012-2013 நிதி ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்தில் 70 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் நடப்பு 2013-2014 நிதி ஆண்டில் மாத சராசரியாக 152 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ரூ. 75 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி இதற்காக பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

ராகுல் - ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் இல்லை: திமுக

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


