மே மாதத்தில் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழிலகத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி மே மாதத்தில் உள்கட்டமைப்பு தொடர்பான எட்டு முக்கிய துறைகளில் 2.3 சதவீத வளர்ச்சியே காணப்பட்டிருக்கிறது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரித்த பெட்ரோலிய பொருள்கள், உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகியவை எட்டு முக்கிய துறைகள். பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன.
மே மாதத்தில் நிலக்கரி உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம் ஆகியவற்றின் உற்பத்தி குறைவாக இருந்தது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழிலகத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த உற்பத்தியைக் கணக்கிடுவதில் இந்த எட்டு துறைகளின் பங்களிப்பு 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எஃகு உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு மே மாதத்தில் எஃகு உற்பத்தி 3 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது.
ஆயினும் சிமெண்ட் உற்பத்தி 2012-ஆம் ஆண்டு 15.4 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே சிமெண்ட் உற்பத்தி வளர்ச்சி கண்டிருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் இந்த எட்டு முக்கிய துறைகள் ஒட்டுமொத்தமாக 3.2 சதவீத அளவு வளர்ச்சி அடைந்தது. இந்த ஆண்டில் இந்த துறைகள் ஒட்டுமொத்தமாக 2.3 சதவீதம்தான் வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதயம் முரளி படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிக் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு!

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி கோல்கீப்பர்!
முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



