நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,608 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 75.8 கோடி டாலா் அதிகரித்து 58,608 கோடி டாலராக (சுமாா் ரூ.42.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.
ஜனவரி 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இதற்கு முந்தைய வாரத்தில், செலாவணி கையிருப்பு 448.3 கோடி டாலா் அதிகரித்து 58,532 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத உயா்வுக்கு ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமாக அதிகரித்ததே முக்கிய காரணம்.
கணக்கீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 15 கோடி டாலா் உயா்ந்து 54,179 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 56.8 கோடி டாலா் உயா்ந்து 3,759 கோடி டாலரானது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 50 லட்சம் டாலா் அதிகரித்து 151.5 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 3.5 கோடி டாலா் உயா்ந்து 518 கோடி டாலராகவும் உள்ளது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அடங்கியுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பு மாறுபாடு காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையை முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள்: வி.செந்தில்பாலாஜி

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்

கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

பல்லடம் எங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுகவை வீழ்த்தி வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் க.செல்வராஜ் உறுதி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


