நாளை(ஜன.1) முதல் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு

அனைத்து வங்கிகளும் ஏடிஎம் சேவைக் கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்த நிலையில் நாளை(ஜன.1) முதல் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அனைத்து வங்கிகளும் ஏடிஎம் சேவைக் கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்த நிலையில் நாளை(ஜன.1) முதல் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்கிறது.

தற்போது வரை வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அதே வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாகவும் அதற்கு அதிகமாக பயன்படுத்தினால் சேவைக் கட்டணமாக ரூ.20-யை தொடர்புடைய வங்கிகள் எடுத்துக் கொள்ளும். 

வேறு வங்கியின் ஏடிஎம்களில் மாநகராட்சிப் பகுதியில் 3 முறையும் மாநகராட்சி அல்லாத பகுதிகளில் 5 முறையும் இலவசமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.அதை மீறினால் ரூ.23.6 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 

இனி நாளை ஜனவரி 1, 2022-லிருந்து இந்த கட்டணங்கள் உயர இருக்கிறது. அதன் படி, ஜிஎஸ்டியுடன் சேர்த்து வங்கிக் கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்-களில் இலவச பரிவர்த்தனையை மீறினால் ரூ.21 ஆகவும் , வேறு வங்கி ஏடிஎம்களில் 25 ரூபாய் சேவைக் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும்.

முன்னதாக,  ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com