ஏர்டெல் ப்ரிபெய்ட் கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டண உயர்வால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
ஏர்டெல் ப்ரிபெய்ட் கட்டணம் உயர்வு:  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஏர்டெல் ப்ரிபெய்ட் கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டண உயர்வால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அலைவரிசை நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவில் பெரிய வலைப்பின்னலைக் கொண்டிருந்த  ஏர்டெல் சமீப காலமாக தன் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. ஜியோவின் வருகை ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டாலும் அதன் ப்ரிபெய்டு கட்டணங்களும் அதன் இழப்பிற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருகிற நவ.26-ஆம் தேதி முதல் தற்போது இருக்கிற ப்ரிபெய்ட் கட்டணம் மேலும் 25 சதவீதம் அதிகரிக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் தன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது ஏர்டெல். 

இதன்படி மாதம் 1ஜிபி டேட்டா ரூ.219 ஆக இருந்த கட்டணம் ரூ.265ஆக மாற இருக்கிறது. இதேபோல் ஒவ்வொரு பிளான்களுக்கும் கட்டணம் அதிகரித்திருக்கிறது.

முன்னதாக 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டண உயர்வை அதிகரித்திருப்பதால் அதன் பங்குதாரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும் இந்த அறிவிப்பிற்கு பின்பும் பங்குச்சந்தையில் ஏற்றத்துடனே ஏர்டெல் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com