’சொமேட்டோ’ நிறுவனத்திலிருந்து அதன் உரிமையாளர் விலகல்

இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ‘சொமேட்டோ’ நிறுவனத்தை விட்டு விலகுவதாக அதன் உரிமையாளர்களில் ஒருவரான பாவிஷ் அகர்வால்  அறிவித்திருக்கிறார்.
’சொமேட்டோ’ நிறுவனத்திலிருந்து அதன் உரிமையாளர் விலகல்
’சொமேட்டோ’ நிறுவனத்திலிருந்து அதன் உரிமையாளர் விலகல்

இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ‘சொமேட்டோ’ நிறுவனத்தை விட்டு விலகுவதாக அதன் உரிமையாளர்களில் ஒருவரான கவுரவ் குப்தா அறிவித்திருக்கிறார்.

’டோர் டெலிவெரி’ முறையில் வீட்டு வாசலுக்கே சென்று உணவை விநியோகம் செய்து வந்த  சொமேட்டோ நிறுவனம் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்ததோடு பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கவுரவ் குப்தா அங்கிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ,’ கடந்த 6 ஆண்டுகளாக சொமேட்டோவில் என்னுடைய உழைப்பையும் ,  செயலையும் வழங்கியிருக்கிறேன் . ஆனால் , இப்போது என் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர இருப்பதால் , இங்கிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். சொமேட்டோவின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழிநடத்துவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது ‘ எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com