குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்தது

வங்கிகள் மற்றும் ஐடி பங்குகளின் விலை உயர்வால் சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

News image
பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்தது
Updated On :13 ஜனவரி 2022, 11:16 am

DIN

வங்கிகள் மற்றும் ஐடி பங்குகளின் விலை உயர்வால் சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

இந்த ஆண்டின் 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் உயர்வால் தொடர் ஏற்றத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில்,  நேற்று(ஜன.11) 60,616.89 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 61,014.37 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 483.85 புள்ளிகள் அதிகரித்து 61,100.74 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.(காலை 10.45 மணி நிலவரம்)

18,055.75 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 18,170.40 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 131.25 புள்ளிகள் உயர்ந்து 18,187.50 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.