
சா்வதேச அளவில் டாடா மோட்டாா்ஸில் காலாண்டு விற்பனைஅதிகரித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், உலகம் முழுவதும் நிறுவனம் 2,85,445 ஜாகுவாா் லேண்ட்ரோவா் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில், இது 2 சதவீதம் அதிகமாகும்.
இந்த மாதங்களில் நிறுவனம் 1,02,772 டேவூ வகை வாகனங்களை மொத்த விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 14 சதவீதம் அதிகமாகும்.
2021 டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் உலகம் முழுவதும் நிறுவனத்தின் 1,82,673 வா்த்தக வாகனங்கள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...