புதிய செல்போன் வாங்கப் போறீங்களா? ஜூனில் வந்த போன்கள் பற்றி...

அதிகப்படியான மொபைல்கள் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
விவோ எக்ஸ் ஃபோல்ட்3 புரோ
விவோ எக்ஸ் ஃபோல்ட்3 புரோபடம் | விவோ இணையதளம்

விவோ, ஜியோமி, ஒன்பிளஸ், ரியல்மீ நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

விவோ எக்ஸ் ஃபோல்ட்3 புரோ

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ மிகவும் புதிய மற்றும் அதன் பழைய வகை மொபைல்களில் இருந்து மாறுபட்ட புதிய அம்சங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எக்ஸ் ஃபோல்ட்3 புரோ என்னும், மடக்கக் கூடிய(ஃபோல்டபல்) போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெல்லிதான, அதிக வெளிச்சம், மடக்கக் கூடிய டிஸ்பிளே, அதிவேக சார்ஜிங், அதிநவீன கேமரா, செய்யறிவு திறன்(AI), கூலிங் சிஸ்டம், ஸ்னாப் ட்ராகன் புராசஸ்சருடன் 8 வது தலைமுறை ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு சிறந்த மாடல் போனாக தயாராகியுள்ளது.

16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

இதன் விலை சுமார் ரூ. 1.5 லட்சமாகும்(1,59,999). மாதத்தவணை மூலமாகவும் சலுகை விலையிலும், ஜூன் 13 ஆம் தேதியில் முதல் ஃபிலிப் கார்ட், விவோ இந்தியா இ-விற்பனைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோமி 14 சிவி
ஜியோமி 14 சிவிபடம் | ஜியோமி இணையதளம்

ஜியோமி 14 சிவி

குறைந்த விலையில் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஜியோமி நிறுவனம், இந்தாண்டு அதிக விலையில் உயர்தரமான ஜியோமி 14 மற்றும் ஜியோமி 14 அல்ட்ரா மொபல்களை ஜூன் 12 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.

லெய்க்கா என்ஜினீயர்ட் கேமராக்கள்,120 ஹெர்ட்ஸ் அல்மனார்ட் டிஸ்பிளே, ஸ்னாப் டிராகன் 8 ஆம் தலைமுறை தயாரிப்பு, ரேம்: 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜுடன் 152.8 மிமீ உயரம், 71.5 மிமீ அகலம், 8.20 மிமீ தடிமன், 193 கிராம் எடையில் தயாராகியுள்ளது.

இந்த மொபலின் விலை அதன் வகையைப் பொறுத்து ரூ.50,000க்கும் குறைவாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ லைட்
ஒன்பிளஸ் நார்ட் சிஇ லைட்படம் | நார்ட் இணையதளம்

ஒன்பிளஸ் நார்ட் சிஇ லைட்

எதிர்பார்த்து போலவே ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் சிஇ 4 லைட் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நார்ட் சி இ மாடலில் லைட் வெர்சனை மலிவு விலையில் வெளியிட்டுள்ளது.

இதன் விலை ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவுடன் மெலிதான உடலமைப்பில் பிளாஸ்டிக்கால் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படவில்லை. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரியல்மீ ஜிடி6
ரியல்மீ ஜிடி6படம் | ரியல்மீ இணையதளம்

ரியல்மீ ஜிடி6

இந்தியாவில் ரியல்மீ ஜிடி6டி மொபைல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல ரியல்மீ ஜிடி 6 மொபைலும் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தவுள்ளன.

ஜியோமி சிவி 14 போலவே ஸ்னாப் ட்ராகன் 8ஆம் தலைமுறையுடன் சிப் செட்கள் அமைந்துள்ளது. இந்த மொபைல் ஜூன் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக திறன் கொண்ட 5,500 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங் திறன், சோனி லைட் வெர்சன் கேமரா சென்சாருடன் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் சந்தை மதிப்பு ரூ. 40,000 வரை இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com