சென்னை கொரட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரியை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (32). இவர் பாடி பார்க் சாலையில் கார் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது கடையில் பல லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரிகள் திருடு போய்விட்டதாக ரமேஷ் கடந்த 9ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் துறையினர், அப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செங்குன்றம் அருகே உள்ள சோழவரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (28) அந்த பேட்டரிகளை திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!

இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்! சுவாரசியம்

விராலிமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

