வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரி திருட்டு: இளைஞர் கைது

சென்னை கொரட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரியை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Updated On :2 மார்ச் 2013, 5:18 am IST

சென்னை கொரட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரியை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (32).  இவர் பாடி பார்க் சாலையில் கார் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் தனது கடையில் பல லட்சம் மதிப்புள்ள கார் பேட்டரிகள் திருடு போய்விட்டதாக ரமேஷ் கடந்த 9ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவல் துறையினர், அப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், செங்குன்றம் அருகே உள்ள சோழவரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (28)  அந்த பேட்டரிகளை திருடியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.