கொடுங்கையூரில் நகைக் கடையில் நடந்த திருட்டு முயற்சி குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் திருவொற்றியூர் பிரதான சாலையில் ஆதர்ஷ் சந்த் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடை திறக்கப்பட்டு சில மாதங்கள்தான் ஆகிறதாம். செவ்வாய்க்கிழமை இரவு கடையை ஆதர்ஷ் சந்தும், ஊழியர்களும் பூட்டிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சில மர்ம நபர்கள் அந்தக் கடையின் அருகே வெற்று இடத்தில் குழித் தோண்டினராம். இதைப் பார்த்த அப் பகுதி மக்கள், கடை ஊழியர்கள் குழிதோண்டுகிறார்கள் என நினைத்தனராம். ஆனால் அந்த மர்ம நபர்கள், அந்த குழியின் மூலம் நகைக்கடையில் துளைப்போட்டு அங்குள்ள நகையை திருடுவதற்காக தோண்டினராம்.
இதற்கிடையே அந்த நகைக் கடையின் சுவர் அடிப்பகுதி ஆழமாக இருந்ததால் அதைத் தாண்டி அவர்களால் தோண்ட முடியவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே புதன்கிழமை கடை திறக்க வந்த ஊழியர்கள், கடையின் சுவர் வரை அந்த குழி தோண்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, விசாரணை செய்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா? லதா ரஜினிகாந்த் விளக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


