நடிகராக இருந்து கட்சித் தொடங்கி முதல்வராகியுள்ள சி. ஜோசப் விஜய் மீது நடிகர் ரஜினிகாந்த்துக்கு பொறாமையா? என்ற கேள்விக்கு அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் மக்கள் மேடை என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளதாக ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
மக்கள் மேடை இயக்கத்தை அறிவித்த பிறகு பல்வேறு ஊடகங்களுக்கு லதா ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார்.
நடிகராக இருந்து முதல்வரான விஜய் மீது ரஜினிகாந்த்திற்கு பொறாமையா? என்ற கேள்விக்கு யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் லதா ரஜினிகாந்த் பதிலளித்துள்ளதாவது:
''பிரபலமாக இருப்பவர்கள் பற்றி பேசுபவர்கள்தான் அதிகம். இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு பெரிய இடத்திற்கு வந்தவரைப் பற்றி பேசுவது தவறு. அது தவறு என்று தெரிந்து அதனை மீண்டும் பெரிதாக்குவது பெரிய தவறு.
அவர் (ரஜினிகாந்த்) ஏற்கெனவே பெரிய தலைவர். அவரிடம் தலைமைப் பண்பை பலர் கற்றுக்கொள்கின்றனர். குணம், தலைமைப் பண்பு என அவர் பலவற்றிற்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.
அவர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர். அவரைக் கொண்டுவந்து இந்த இடத்தில் நிற்கவைத்துப் பேசுவது தவறு என்பது எனக்கும் தெரியும்; அனைவருக்கும் தெரியும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Is Rajini jealous of Vijay citizen-driven public movement named Makkal Medai Latha Rajinikanth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் மேடை இயக்கத்தின் நோக்கம் என்ன? லதா ரஜினிகாந்த் விளக்கம்!
‘மக்கள் மேடை’ : புதிய இயக்கம் தொடங்கினாா் லதா ரஜினிகாந்த்

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்

விஜய் முதல்வராவதைத் தடுத்தேனா? ரஜினிகாந்த் விளக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




