இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வேல்ஸ் பல்கலை.யில் சர்வதேச வணிக மேலாண்மைக் கருத்தரங்கு

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் சர்வதேசக் கருத்தரங்கு

Updated On :22 மார்ச் 2013, 5:10 am IST

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் சர்வதேசக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

மேலாண்மைத் துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கில் பொருளாதாரச் சரிவின் மூலம் மேலாண்மைத் துறை எதிர்நோக்கிய பிரச்னைகள், சர்வதேச அளவில் நிர்வாகத்துறை முன்னேற்றங்கள், மேலாண்மை நிர்வாகத்தை மேம்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கசுயோகி மோட்டோகஷி, ராஞ்சி ஐ.ஐ.எம். இயக்குனர் எம்.ஜி.சேவியர், மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுசிலா தேவி, மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் என்.செல்வராஜ் ஆகியோர் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டனர்.

வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.கோபிநாதன், பதிவாளர் கோவிந்தராஜன், வணிக மேலாண்மைத்துறைத் தலைவர் எஸ்.ப்ரிதா, எஸ்.வசந்தா, கே.எஸ்.ஹேமமாலினி, ஜெரீன் பீட்டர், எஸ்.சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.