சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ரெளடி கருக்கா சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புளியந்தோப்பில் கைது செய்யப்பட்ட கருக்கா சுரேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On :22 ஏப்ரல் 2013, 3:59 am IST

புளியந்தோப்பில் கைது செய்யப்பட்ட கருக்கா சுரேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: புளியந்தோப்பு பகுதியில் உள்ள பி.கே. காலனி, கே.எம். கார்டன், பட்டாளம் ஆகிய இடங்களில் சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் என்பவர் பொதுமக்களை மிரட்டி பணம் கேட்டும், வழிப்பறி மற்றும் கொலை முயற்சி சம்பவங்களிலும் ஈடுபட்டு

வந்தார்.

இதையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புளியந்தோப்பு பகுதியில் சுமார் 41 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.